அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

நாளை அபூர்வ சந்திர கிரகணம்

180 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை அபூர்வ சந்திர கிரகணம்
சென்னை, அக். 16-
வழக்கமாக சந்திரகிரகண மும், சூரிய கிரகணமும் குறைந்தது ஆறு மாத இடைவெளியில் வரும். ஆனால் தற்போது ஒரே மாதத்தில் சூரிய, சந்திர கிரகணங்கள் வருவது ஜோதிட, விஞ்ஞான ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. நாளை மாலை சந்திரக கிரகணம் நிகழவிருக்கிறது. இவ்வாறு இரண்டு கிரகணங்கள் ஒரே மாதத்தில் இதற்கு முன் 180 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இவ்வாறு ஒரே மாதத்தில் இரண்டு கிரக ணங்கள் நிகழ்வதற்கு மலமாத விளைவு எனக் கூறுவர்.
பொதுவாக இந்த மல மாத விளைவு பலநூறு ஆண்டு களுக்கு ஒரு முறையே நிகழும் அபூர்வ நிகழ்வாகும்.
நாளை சந்திர கிரகணம் ரேவதி நட்சத்திரத்தில் மீனம், மேஷ ராசியில் 5-வது ஜாமத்தில் நிகழ்கிறது. நாளை மாலை 5.04 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் 5.35 மணிக்கு மத்திய நிலையை அடைகிறது. 6.03 மணிக்கு நிறைவு பெறுகிறது. சந்திரனுக்கு உரிய கிழமையான திங்கட்கிழமை இது நிகழ்வது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.
வழக்கமாக கிரகண காலங்கள் கோவில்களில் நடை சாத்துவது வழக்கம். கிரகணத்தின் போது பக்தர் களின் மனநிலை வழிபாடு செய்வதற்குரிய ஒரு மித்த தெய்வீக சிந்தனையை அடை வது கடினம். அவர்களின் மனநிலையில் கிரகண நேரத்தின் போது மாற்றங்கள் ஏற்படும். எனவே இந்த சூழ்நிலையோடு பக்தர்கள் ஆலயங்களுக்கு வந்து ஆலய சுத்தம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும் கிரகண கதிர் வீச்சுகளால் கோவில் களில் உள்ள விக்ரகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற் காகவும் கிரகண நேரத்தில் கோவில்களில் நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்ததும் அது மீண்டும் திறக்கப்படும்.
மேலும் கிரகண காலங்களில் ஆலயங்கள் மிகவும் தூய்மை படுத்தப்படுகின்றன. மடப் பள்ளிகளில் உள்ள உணவை காலி செய்து அந்த அறை நன்கு சுத்தப்படுத்தப்பட்டு கிரகணம் முடிந்ததும் புதிதாக அக்னி மூட்டி உணவு தயாரிக்கப்பட்டு நிவேதனத்திற்கு பயன்படுத் தப்படுகிறது.
நாளை அபூர்வ சந்திரக் கிரணம் நிகழ்வதால் ஆகம விதிப்படி கோவில்களில் நடை சாத்தும் ஐதீகம்.
தமிழ் நாடெங்கும் உள்ள முக்கிய கோவில் களில் முக்கியமாக கடைபிடிக் கப்படும் என்றும் எதிர் பார்க் கப்படுகிறது.
திருப்பதி கோவிலில் நாளை கிரகணத்தை முன்னிட்டு நடை சாற்றப்படுகிறது.
நாளை மதியம் 12 மணியிலிருந்த மாலை 6.30 மணி வரை சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாற்றப்படுகிறது.
இங்கு நாளை மாலை கல்யாண உத்சவம் மாலை நேர பூஜைகளும் ரத்து செய் யப்படுகின்றன. இந்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய கோவிலான மதுரை மீனாட்சியம்மன் கோவி லிலும் நாளை சந்திர கிரகணத்தையொட்டி கோவில் நடை சாற்றப்படுகிறது.
நாளை மாலை 5.3 மணி முதல் 6.3 மணி வரை சுவாமி, அம்மன் சந்நிதிகளில் பல கணி கதவு மட்டும் சாற்றப்படுகிறது. மற்றக் கதவுகள் வழக்கம் போல திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தள்ளது.
இதே போல நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவி லிலும் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலிலும் கிரகண நேரத்தில் நடை சாற்றப்படுகிறது.
சென்னையில் பார்த்த சாரதி கோவில், கபாளீஸ்வரர் கோவில் போன்ற முக்கிய கோவில்களில் கிரகண நேரத்தில் நடை சாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆலயங்களில் நாளை கிரகணநேரத்தில் நடை சாற்றப்படும் ஆகம ஐதீகம் கடைபிடிக்கப்படலாம்.
கோவில்களில் நடை சாற்றப்படுவதை யொட்டி முன்கூட்டியே வழிபாடு செய்தவற்கு பக்தர்கள் கூட்டம் முண்டியடிக்கிறது.

இது மாலை மலர் செய்தி

பழைய பஞ்சாங்கச் செய்தி
அருக்கனையும் சோமனையும் ஐம்மூன்று நாளை (நாளில்) நெருங்கி அரவமது தீண்டில் - செருக்களத்தில் மன்னர் மடிவார் மடியா விடிலங்கு அன்னம் அரிதாய் விடும்
பதினைந்து நாட்களுக்குள் சூரிய சந்திர கிரகணங்கள் வந்தால் நாட்டிற்கு நல்லதல்ல என நான் கேள்விப்பட்டிருக்கேன்

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு